ஒரே சீனா என்ற கொள்கையில் பல நாடுகள் ஊன்றி நிற்கும்
2024-05-22 15:06:23

வெனிசூலா, சாம்பியா, நவ்ரு, வியட்நாம், பல்கேரியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நட்பார்ந்த மக்கள் அண்மையில் ஒரே சீனா என்ற கொள்கையைக் கடைபிடிப்பதாக தெரிவித்தனர். தவிரவும், ஐ.நா பாதுகாப்பவையின் 2758ஆவது தீர்மானத்தின்படி, எந்த வடிவங்களிலும் தைவான் சுதந்திர சக்தியின் பிரிவினை நடவடிக்கைகளுக்கும் சீனாவின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெனிசுலா அரசுத் தலைவர் மாதுரோ தேசியளவில் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய போது கூறுகையில்,

உலகில் ஒரே ஒரு சீனா உண்டு. ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச கட்டமைப்பிலும் ஒரே சீனா உள்ளது என்பதில் ஐயமில்லை. ஒரே சீனா என்ற கொள்கையைச் சீர்குலைக்கும் சூழ்ச்சி தோல்வியடையும். வெனிசுலா அரசு வெளியிட்ட கூட்டறிக்கையின்படி, ஒரே சீனா என்ற கொள்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.