இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் சீனாவின் நிதி சாரா வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு
2024-05-23 19:12:33

சீன வணிக அமைச்சகம் 23ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் திங்கள் வரை, சீனாவின் நிதி சாரா வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகை 34 ஆயிரத்து 347 கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.7 விழுக்காடு அதிகரித்தது. இதில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் கூட்டாக பங்கெடுக்கும் நாடுகளில் சீனத் தொழில் நிறுவனங்கள் செய்த நிதி சாரா நேரடி முதலீட்டுத் தொகை, 7 ஆயிரத்து 777 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.4 விழுக்காடு அதிகரித்தது.