அமெரிக்காவின் 12 இராணுவத் தொழில் மற்றும் உயர்நிலை நிர்வாகிகள் மீது எதிர்ப்பு நடவடிக்கைகள்:சீனா
2024-05-23 09:12:45

மே 22ஆம் நாள், அமெரிக்காவின் இராணுவத் தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர் நிலை நிர்வாகிகள் மீதான எதிர்ப்பு நடவடிக்கைக்கான தீர்மானம் ஒன்றை சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதே நாளில், இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில், உக்ரேன் நெருக்கடியில் சீனாவின் நியாயமான நிலைப்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான பங்குகளை அமெரிக்கா புறக்கணித்து வருகிறது. ரஷியாவுடன் தொடர்புடைய காரணிகள் என்ற சாக்குப்போக்கில், பல சீனாவின் நிறுவனங்கள் மீது ஒரு சார்பு தடை நடவடிக்கைகளை அமெரிக்கா நடைமுறைபடுத்தி வருகிறது. தவிரவும், சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்த நடவடிக்கை, ஒரே சீனா என்ற கொள்கை மற்றும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளை கடுமையாக புறக்கணித்தது. சீனாவின் உள்விவகாரத்தில் கடுமையாக தலையீடு செய்து, சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டிற்கு இது தீங்கு விளைவிக்கும்.

சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டின் தடை நடவடிக்கைக்கு எதிரான சட்டத்தின்படி, லாக்ஹீட் மார்டின் உள்ளிட்ட 12 இராணுவத் தொழில் மற்றும் 10 உயர்நிலை நிர்வாகிகள் மீது எதிர்ப்பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.