இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
2024-05-23 18:00:03

இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்கள் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்  இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த புதன்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில், வாழும் அனைத்து வயதினருக்கும் வெப்ப நோய்  பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும், மக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என என்றும் IMD தெரிவித்துள்ளது.

மக்கள் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், குளிர்ந்த இடங்களில் வசிக்குமாறும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும்  இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்கள் தற்போது வெப்ப அலையின் தாக்கத்தின் கீழ் உள்ளன, வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்து வருகிறது, இதனால் மக்களின் ஆரோக்கியமும், வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.