அல்-ஃபஷிர் நகரில் நிகழ்ந்த மோதல் கவலை அளிப்பதாய் உள்ளது:குட்ரேஸ்
2024-05-24 17:25:02

சூடானின் மேற்கு பகுதியிலுள்ள அல்-ஃபஷிர் நகரில் நிகழ்ந்த புதிய சுற்று மோதல் குறித்து, ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் மே 24ஆம் நாள் சமூக ஊடகங்களில் தெரிவிக்கையில், சூடானில் ஆயுத மோதல் நிகழ்ந்தது முதல் இதுவரை 2வது ஆண்டாகும். உள்ளூர் மனித நேய சூழ்நிலை தொடர்ச்சியாக மோசமாகி வருகிறது. அல்-ஃபஷிர் நகரில் நிகழ்ந்த தீவிரமான துப்பாக்கி சண்டை கவலை அளிப்பதாய் உள்ளது என்றார்.

இம்மோதலுடன் தொடர்புடைய பல்வேறு தரப்புகள் போர் நிறுத்த சர்வதேச சமூகம் கூட்டாக முன்னேற்றி, பன்முக அமைதியான வளர்ச்சிப் போக்கினைத் துவக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சூடான் விரைவு ஆதரவு படை மே 10ஆம் நாள் அல்-ஃபஷிர் நகரின் மீது தாக்குதல் தொடுக்க துவங்கியது.