லை சிங்தேவின் தைவான் சுதந்திர செயல் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது
2024-05-24 20:34:31

தைவான் பிரதேசத்தின் தலைவர் லை சிங்தே மே 20ஆம் நாள் வழங்கிய உரையில், கூறப்படும் ஜனநாயகம் பற்றி அதிகமாக கூறி, தைவான் உலக ஜனநாயகச் சங்கிலியின் தனிச்சிறப்பு மற்றும் உலக ஜனநாயகச் சங்கிலியின் திறவுக்கோள் என்று கூறினார். அவர் ஜனநாயகம் என்ற பெயரில் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் அரசியல்வாதிகளின் தேவையை நிறைவு செய்து, தனக்கு மேலதிக ஆதரவுகளை நாட முயல்கின்றார். போலியான ஜனநாயகம் மற்றும் உண்மையான தைவான் சுதந்திரம் என்ற அவரது சாராம்சத்தை இது மறைக்க முடியாது. தைவான் சீனாவின் தைவான் ஆகும் என்ற உண்மையை இது மாற்ற முடியாது.

மே 20ஆம் நாள் அவர் வழங்கிய உரையில், புதிய இரு நாட்டு கருத்தை பரப்பினார். இது, சீனப் பெருநிலப்பகுதியிலும், தைவான் தீவிலும் கடும் குற்றச்சாட்டுக்குள்ளாயிற்று. தைவான் நீரிணை இரு கரைகள், ஒரே சீனாவைச் சேர்ந்த உண்மை மற்றும் தற்போதைய நிலைமை தெளிவானது.

சட்ட ரீதியில், கைரோ அறிக்கை மற்றும் போட்ஸ்தம் Potsdam அறிக்கை உள்ளிட்ட சர்வதேச சட்ட அதிகாரம் கொண்ட ஆவணங்களில், தைவான் மீதான சீனாவின் அரசுரிமை உறுதிப்படுத்தப்பட்டது. வெளிப்புறச் சக்திகளின் தலையீடு மற்றும் சீர்குலைப்பு உள்ளிட்ட காரணங்களால், தைவான் நீரிணையின் இரு கரைகள் ஒன்றிணைக்கவில்லை. இருந்த போதிலும், சீனப் பெருநிலப்பகுதியும், தைவானும் சீனாவைச் சேர்ந்த உண்மை எப்போதும் மாறவில்லை. சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாடு பிரிக்கப்படவில்லை மற்றும் பிரிக்கப்பட கூடாது.

ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில், உலகில் 183 நாடுகள் சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவின. அண்மையில் பல நாடுகளின் அரசுகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதாக வலியுறுத்தி, தைவான் சீனாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என அறிவித்து, எந்த வடிவத்திலான தைவான் சுதந்திர பிரிவினையையும், வெளிப்புற சக்திகள் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் செயலையும் எதிர்த்தனர்.

தைவான், சீனாவின் தைவான் ஆகும். உலகின் தைவான் அல்ல. லை சிங்தே போன்றவரும் வெளிப்புற சக்தியும் எவ்வாறு கள்ளத்தனமாக கூட்டு சேர்ந்தாலும், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்ற தகுநிலை மற்றும் உண்மையை மாற்ற முடியாது. சீனாவின் ஒன்றிணைப்புக்கான போக்கினைத் தடுக்க முடியாது.