சீனா-வளைகுடா ஒத்துழைப்பு ஆணையத்தின் தொழில் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மன்றத்தில் டிங் சுயே சியாங் பங்கெடுப்பு
2024-05-24 08:55:17

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமையமைச்சருமான டிங் சுயே சியாங் 23ஆம் நாள் சியாமன் நகரில் நடைபெற்று வரும் சீன-வளைகுடா ஒத்துழைப்பு ஆணையத்தின் தொழில் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக் கடிதத்தைப் படித்து உரை நிகழ்த்தினார்.

வாழ்த்துக் கடிதத்தைப் படித்த பின்னர் அவர் பேசுகையில், இம்மன்றத்துக்கு ஷிச்சின்பிங் அளித்துவரும் முக்கியத்துவத்தை வாழ்த்துக் கடிதம் முழுமையாகக் காட்டுகின்றது. சர்வதேச சூழ்நிலைச் சிக்கலாக மாறி வரும் நிலையை எதிர்கொண்டு, சீனாவிற்கும் வளைகுடா ஒத்துழைப்பு ஆணையத்துக்குமிடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது பிராந்திய நிதானத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்குத் துணை புரியும். இதுவும் இரு நாட்டு மக்களுக்குப் பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் என்றார்.

சீனா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு ஆணையத்தின் தேசிய அரசு வாரியங்கள், தொழிற்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் முதலிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 600 பேர் இம்மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.