வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஓற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப இலங்கை அரசு தலைவர் அழைப்பு
2024-05-24 17:24:50

இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஒற்றுமையுடன் நாட்டின் வளர்ச்சியை மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்துள்ளார். தெற்காசிய நாடான இலங்கையில், புத்தரின் பிறப்பு, அவரின் ஞானம் ஆகியவற்றை நினைவுகூரும் இரண்டு நாள் வெசாக் பண்டிகை கால கொண்டாட்டம் தொடங்கியதாக தெரிவித்தார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ரணில் விக்ரமசிங்கே, கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த சவாலான தருணத்தில், ஒரு தேசமாக இலங்கை புத்தர் காட்டிய அறிவார்ந்த வழியில் செல்வதற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், நாளைய  சிறந்த எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும் என்று விக்கிரமசிங்கே கூறினார்.

இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வெசாக் பண்டிகையை மெய்நிகர் முறையில் கொண்டாடிய அரசுத் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, அனைத்து பௌத்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.  பௌத்தர்களின் மிக முக்கிய மத நிகழ்வான வெசாக் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை 278 கைதிகளுக்கு அரசு தலைவர்  மன்னிப்பு வழங்கியதாக சிறைச்சாலைகள் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.