7ஆவது எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு துவக்கம்
2024-05-24 15:06:25

7ஆவது எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு மே 24ஆம் நாள் காலை ஃபுஜியன் மாநிலத்தின் ஃபுசோ நகரில் துவங்கியது. சீனத் தேசிய தரவுப் பணி அமைப்பு முறை சரிப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறுகின்ற முதல் எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு இது ஆகும். இந்த உச்சிமாநாட்டில் முக்கிய மன்றமும் 10க்கும் மேற்பட்ட துணை மன்றங்களும் அடங்கும். எண்ணியல் சீன வளர்ச்சி பற்றிய 2023ஆம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் எண்ணியல் சீனக் கட்டுமானத்தின் புதிய சாதனைகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன குறிப்பிட்டத்தக்கது.