சீனாவை தனிமைப்படுத்துவதோ அல்லது விலக்கி வைப்பதோ எந்த ஒரு தரப்புக்கும் நன்மை பயக்காது – சிங்கப்பூர் துணை தலைமையமைச்சர்
2024-05-25 16:05:05

பொருளாதார ரீதியான சீனாவின் செல்வாக்கு அதிகமானது. அதன் நீண்டகால பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மீது இன்னும் நம்பிக்கை நிறைந்திருக்கிறது என்று சிங்கப்பூரின் துணை தலைமை அமைச்சர் கான் கிம் யோங் 24ஆம் நாள்  தெரிவித்தார்.

அன்று ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய எதிர்காலம் பற்றிய 29ஆவது சர்வதேச மன்றக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறுகையில்

பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் சீனா முனைப்புடன் கலந்து கொள்வது உலகிற்கு நன்மை ஏற்படுத்தும். சீனாவை தனிமைப்படுத்துவதோ அல்லது விலக்கி வைப்பதோ எந்த ஒரு தரப்புக்கும் நன்மை பயக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

சீனா, ஆசியாவின் பெரும்பாலான நாடுகளுக்கு மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக திகழ்கிறது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அறைகூவல்களைத் தீர்ப்பதற்கு சீனாவின் பங்கேற்பு இன்றியமையாதது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனப் பொருளாதார வளர்ச்சி, ஆசியாவுக்கு, உலகிற்கு கூட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் கான் கிம் யோங் இந்த மன்றக்கூட்டத்தில் கூறினார்.