சீன-நேபாளம் இடையே பாரம்பரிய எல்லை வர்த்தக நடவடிக்கை மறுதொடக்கம்
2024-05-25 19:59:20

சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே பாரம்பரிய எல்லை வர்த்தகம் செய்யும் இடங்களின் மறுதிறப்பு விழா மே 25ஆம் நாள் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசெ நகரில் நடைபெற்றது.

இவ்விழாவின்போது, ஷிகாசெ நகரைச் சேர்ந்த ட்சென் டாங் பகுதியில் பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபடும் 110 சீன வியாபாரிகளும் 47 நேபாள வியாபாரிகளும், அன்றாட பயன்பாட்டு பொருட்கள், கட்டிட பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்கள், தனிச்சிறப்பு விவசாயப் பொருட்கள்நேபாளா கைவினை பொருட்கள் உள்ளிட்ட 50 வகை வணிக பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

ஷிகாசே நகரின் வணிகத் துறைத்தலைவர் கூறுகையில், பாரம்பரிய எல்லை வர்த்தக நடவடிக்கை, எல்லை பகுதியின் வளர்ச்சிக்கும், எல்லையோர மக்களிடையேயான பரிமாற்றத்துக்கும் துணைபுரியும் என்று தெரிவித்தார்.