சீனாவின் வளர்ச்சி வழிமுறை உலகின் வேறு பகுதியில் நகலெடுக்கப்படுகிறது – ஐ.எம்.ஃஎப் இயக்குநர்
2024-05-26 19:45:51

உலகின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு பார்த்ததில் சீனாவின் வளர்ச்சி வழிமுறையை பிற நாடுகள் நகலெடுத்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சுட்டிக்காட்டினார்.

அவர் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணலில்,

சீனாவின் வெற்றி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் வளர்ச்சியின் நன்மைகளைப் பகிர்ந்து அளிப்பதாகும் என்றார். மேலும், நகரப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும், கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றமானது, கடும் இன்னலுக்கு ஆளான மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்மைகளை அளித்துள்ளது. இடைக்கால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளின் கட்டுமானத்தில் முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் திறமைசாலிகள் வளர்ப்பு, சட்ட ஒழுங்குமுறையை முழுமைப்படுத்துவது, போட்டித்திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட சீனாவின் அனுபவங்களை பிற நாடுகளுக்குப் பகிர்ந்து கொள்கிறோம். உலகின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டதில், சீனாவின் வளர்ச்சி வழிமுறையை பிற நாடுகள் நகலெடுத்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக, சீனாவின் லோயஸ் பீடபூமியில் பாலைவனத்தை விவசாய நிலமாக வெற்றிகரமாக மாற்றப்பட்டது. இது உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வருகிறது. இதே போன்று எத்தியோபியா நாட்டில் ஒருமித்த செயல்திட்டத்தை கண்டேன் என்று குறிப்பிட்டார்.