ஜெர்மனியில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்
2024-05-26 15:19:41

பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் ஜெர்மனியில் மே 26ஆம் நாள் முதல் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் பிரான்ஸ் அரசுத் தலைவர் ஒருவர் ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, மேக்ரான் பலமுறை பெர்லினில் ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலஃப் ஸ்கோல்ஸுடன்  சந்திப்பு நடத்தியிருந்தார். அதே போல், ஸ்கோல்ஸ் பலமுறை பிரான்ஸில் பயணம் மேற்கொண்டிருந்தார். இருந்த போதிலும், அரசுமுறைப் பயணம் என்பது மேலும் உயர் நிலையிலானது. இது இரு நாட்டுறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது.