அடுத்த வாரம் ஹமாஸ் இயக்கத்துடன் இஸ்ரேல் மீண்டும் பேச்சுவார்த்தை – தகவல் வெளியீடு
2024-05-26 16:13:33

எகிப்து மற்றும் கத்தார் ஆகியவற்றின் புதிய முன்மொழிவு குறித்து, இஸ்ரேல் அடுத்த வாரம் ஹமாஸ் இயக்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் துவங்கும் என்று இஸ்ரேலைச் சேர்ந்த தகவல் அறிந்த ஒருவர் 25ஆம் நாள் தெரிவித்தார்.

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் தலைவர், அமெரிக்க மத்திய உளவு அமைப்பின் தலைவர், கத்தார் தலைமை அமைச்சர் ஆகிய மூவரும் 25ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸில் சந்திப்பு நடத்திய போது, எகிப்து மற்றும் கத்தார் ஆகியவற்றின் புதிய முன்மொழிவின்படி மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என்று முடிவெடுத்தனர்.