முதல் 4 திங்களில் சீனாவின் தொழில் நிறுவனங்களின் இலாபம் 4.3 விழுக்காடு அதிகரிப்பு
2024-05-27 14:31:11

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 திங்களில் சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபத் தொகை, 2 இலட்சத்து 9 ஆயிரத்து 469 கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.3 விழுக்காடு அதிகம்.

இவ்வாண்டின் முதல் 4 திங்கள்காலத்தில், இந்நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகளைக் கட்டுப்படுத்தும் அரசு சார் தொழில் நிறுவனங்களின் இலாபத் தொகை 73 ஆயிரத்து 964 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.8 விழுக்காடு குறைவு. தனியார் நிறுவனங்களின் இலாபத் தொகை 54 ஆயிரத்து 480 கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சுரங்கத் தொழில் துறையின் மொத்த இலாபத் தொகை 39 ஆயிரத்து 239 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.6 விழுக்காடு குறைந்துள்ளது. ஆக்கத் தொழில் துறையின் மொத்த இலாபத் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 398 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8 விழுக்காடு உயர்வு. மின்னாற்றல், அணல் மின்னாற்றல், எரிவாயு, தண்ணீர் உற்பத்தி மற்றும் வினியோகத் தொழில் துறையின் மொத்த இலாபத் தொகை 25 ஆயிரத்து 832 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 36.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.