பஹ்ரேன், எகிப்து, துனீசிய மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் சீனப் பயணம்
2024-05-27 11:34:54

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், பஹ்ரேன் மன்னர் ஷேக் ஹமாத் பின் ஈசா அல்-கலிஃபா, எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபாத்தா அல்-சிசி, துனீசிய அரசுத் தலைவர் கைஸ் சயீத், ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவர் முகமதுபின் சயீத் அல் நஹியன் ஆகியோர் மே 28ஆம் நாள்  முதல் ஜூன் முதல் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு, சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ட்சுன் யின் அம்மையார் அறிவித்தார்.