சீனத் தலைமையமைச்சர் மற்றும் தென்கொரிய அரசுத் தலைவர் சந்திப்பு
2024-05-27 09:41:15

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் 26ஆம் நாள் பிற்பகல் தென்கொரியாவின் தலைநகரான சியோலில் அந்நாட்டு அரசுத் தலைவர் யோன் சுக் யொலைச் சந்தித்துப் பேசினார்.

லீ ச்சியாங் கூறுகையில், சீனாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மரியாதை, திறப்பு மற்றும் சகிப்பு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது ஆகியவற்றை கடைப்பிடித்து வருகின்றன. இரு தரப்புகளின் உறவு வேகமாக வளர்ந்து வருகின்றது. இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புத் துறையில் பல சாதனைகள் பெறப்பட்டுள்ளன. சீனாவுடன் இணைந்து இரு நாட்டு நட்பார்ந்த மற்றும் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையுடனான திசையை நோக்கி, ஒன்றுக்கு ஒன்று மையமான நலன்கள் மற்றும் முக்கிய கவலைகளை மதித்து, பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினையை அரசியல் மயமாக்குவதைத் தடுக்க வேண்டும். இரு நாட்டு உறவை நிதானமாகவும் சிறப்பாகவும் வளர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.