ஒரே சீனா என்ற கோட்பாட்டு:பாகிஸ்தான்
2024-05-27 09:19:25

ஒரே சீனா என்ற கோட்பாட்டில் பாகிஸ்தான் ஊன்றி நின்று வருகின்றது என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் முகமது ஷாபாஸ் ஷெரீப் 26ஆம் நாள் மீண்டும் வலியுறுத்தினார்.

சீனாவின் உறுதியான சகோதரன் மற்றும் நெடுநோக்குப் பங்காளியான பாகிஸ்தான் தைவான் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாட்டை எப்போதும் ஆதரித்து வருகிறது என்று சமூக ஊடகத்தின் மூலம் அவர் வெளியிட்ட அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பாகிஸ்தான் உறுதியாக ஆதரித்து வருகின்றது. சீனாவின் மையமான நலன்களை உறுதியாகப் பாதுகாத்து ஆதரித்து வருகின்றது. எந்த வடிவத்திலும் " தைவானின் சுதந்திரத்தையும்" எதிர்க்கின்றது. தைவான் சீனாவின் உரிமை பிரதேசத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகும் என்று பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி செய்தியாளர்களிடம் மீண்டும் வலியுறுத்தினார்.