முடக்கி வைக்கப்பட்ட ரஷிய சொத்துகள் குறித்து ஏழு நாடுகள் குழுவின் கருத்து வேற்றுமை
2024-05-27 09:56:55

அண்மையில் ஏழு நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம் இத்தாலியில் நடைபெற்றது. முடக்கி வைக்கப்பட்ட ரஷியாவின் சொத்துகளால் ஏற்படும் லாபத்தைப் பயன்படுத்தி உக்ரைனுக்கு ஆதரிப்பது குறித்து ஏழு நாடுகள் குழு முன்னேற்றம் அடைந்துள்ளதாக 25ஆம் நாள்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் வரைவுத் திட்டம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இத்தாலி நிதி அமைச்சர் இக்கூட்டத்துக்குப் பின்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் ரஷியாவின் சொத்துகள் அல்லது அதன் லாபத்தை மேலை நாடுகள் முடக்கி வைத்தால், ரஷியாவிலுள்ள மேலை நாடுகளின் சொத்துகளையும் ரஷியா அதே வழியில் கையாளும் என்று ரஷிய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் அந்நாட்டின் செய்தி ஊடகம் 26ஆம் நாள் ஒலிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.