பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றிய ஐரோப்பா-பாலஸ்தீன பேச்சுவார்த்தை
2024-05-27 09:21:37

பாலஸ்தீன தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முஹம்மது முஸ்தஃபாவுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மைக்கேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இயன்ற அளவில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். நிபந்தனையின்றி பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மனித நேய உதவி தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்று மைக்கேல் வலியுறுத்தினார். இரு நாடுகள் தீர்வு திட்டத்தை நனவாக்க ஐரோப்பிய ஒன்றியம் பாடுபடும். இப்பிரதேசத்தின் அமைதியை நனவாக்குவதற்கான ஒரே ஒரு தீர்வு இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல பத்து ஆண்டுகளில், சுதந்திரத்துக்கான போராட்டம் மற்றும் சர்வதேச சமூகத்தின் முயற்சியுடன், சுதந்திரமான இறையாண்மை வாய்ந்த பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்கு பாலஸ்தீனம் முன் எப்போதும விட நெருங்கியதாக இருக்கிறது என்று முஹம்மது முஸ்தஃபா தெரிவித்தார்.