ஒரே சீனா கொள்கை பொது மக்களின் விருப்பம்: சீனா
2024-05-28 11:36:18

உலக சுகாதார அமைப்பில் பார்வையாளராக தைவானைச் சேர்ப்பது குறித்து சில நாடுகள் முன்மொழிந்தன. மே 27ம் நாள் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77வது மாநாட்டில் இம்முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக, உலக சுகாதார அமைப்பு, தைவான் தொடர்புடைய முன்மொழிவுகளை நிராகரித்து வந்துள்ளது.

ஒரே சீனா என்ற கொள்கை, சர்வதேச சமூகத்தில் பொது மக்களின் விருப்பத்துக்குரியது. அதற்கு அறைகூவலை விடுக்கக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 28ம் நாள் இவ்விவகாரம் குறித்து தெரிவித்தார்.

ஒரே சீனா கொள்கையின் முன்நிபந்தனையில், தைவான் பிரதேசத்தின் மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பின் தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும் என்றும், உலகளவில் ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றும் நிலைமையை மாற்ற முடியாது. சீனாவின் ஒன்றிணைப்புப் போக்கு மாறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.