சீன-அமெரிக்க கடல் விவகாரம் பற்றிய இரண்டாவது சுற்று கலந்தாய்வு
2024-05-28 10:31:48

மே 24ஆம் நாள் சீன-அமெரிக்க கடல் விவகாரம் பற்றிய இரண்டாவது சுற்று கலந்தாய்வு காணொளி மூலம் நடைபெற்றது. கடல் நிலைமை மற்றும் கடல் தொடர்பான பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தையின் மூலம் தொடர்பை நிலைநிறுத்த இருதரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். தவறான எண்ணங்களையும் தவறான தீர்ப்புகளையும் தவிர்த்து, கடல் இடர்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். சீனாவைச் சுற்றியுள்ள நீரில் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் குறித்து சீனா தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது.

ஒரே சீனா என்ற கோட்பாடு, சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையாகும். இதுவும், கடல் தொடர்பான இரு தரப்புகளுக்கிடையிலான உரையாடலுக்கு முக்கிய அடிப்படையாகும். தைவான் சுதந்திரம், தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தில் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். தைவான் சுதந்திரச் சக்தியை ஆதரிப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். தைவான் சுதந்திரத்தை ஆதரிக்காத வாக்குறுதிகளைச் செயல்படுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.