சீன-ஜப்பான்-தென் கொரிய ஒத்துழைப்பின் முன்னேற்றம்
2024-05-28 09:18:47

25ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1999ஆம் ஆண்டில், சீன-ஜப்பானிய-தென் கொரிய தலைவர்கள், ஆசியான்,சீன-ஜப்பான்-தென்கொரிய (10+3) தலைவர்கள் மாநாட்டின் போது காலை உணவு கூட்டத்தில் கலந்து கொண்டனர். சீன-ஜப்பான்-தென் கொரிய ஒத்துழைப்புக்கான வளர்ச்சிப் போக்கு இதில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில், இம்மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு, இன்னல்களைச் சமாளித்து முன்னேறி, பிரதேசம் மற்றும் உலகின் பொருளாதார அதிகரிப்பு, பிரதேசத்தின் ஒருமைப்பாட்டில் முக்கிய பங்காற்றியுள்ளது.

9ஆவது சீன-ஜப்பான்-தென்கொரிய தலைவர்கள் கூட்டம் மே 27ம் நாள் சியோலில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இதில் 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். முதலாவது, ஒத்துழைப்பின் விரிவான மறுதொடக்கத்தை முன்னெடுத்தல், இரண்டாவது, பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் ஒன்றுக்கொன்று இணைப்பை ஆழமாக்குதல், மூன்றாவது, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் ஒத்துழைப்புக்கு வழிகாட்டுதல், நான்காவது, மானுட பரிமாற்றத்தை அதிகரித்தல், ஐந்தாவது, தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவது ஆகியவை இடம்பெற்றன.

இந்தக் கூட்டத்தை புதிய தொடக்க புள்ளியாகக் கொண்டு, ஒத்துழைப்பின் நிலைப்புத்தன்மை மற்றும் தொடர்ச்சி தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று மூன்று நாடுகளின் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில், வெளிபுறத்திலிருந்து சீர்குலைவுகளைச் சமாளித்து, ஒன்றுக்கு ஒன்று முக்கிய நலன்கள் மற்றும் கவனங்களுக்கு இம்மூன்று நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். இக்கூட்டத்தின் சாதனைகளை நடைமுறைப்படுத்தி, இம்மூன்று நாடுகளின் ஒத்துழைப்பை புதிய உயர் நிலைக்குத் தூண்ட வேண்டும். இது, இம்மூன்று நாடுகளின் மக்களுக்கு நன்மை அளிப்பதுடன், பிரதேசம் மற்றும் உலகத்தால் வரவேற்கப்படும்.