சீன விமானச் சேவை நிறுவனத்தில் இணைந்த 6ஆவது சி919 விமானம்
2024-05-28 20:00:26

புதிதாக ஒரு சி919 விமானம், 28ஆம் நாள் காலையில் ஷாங்காய் மாநகரிலுள்ள ஹோங்ச்சௌ சர்வதேச விமான நிலையத்தில் சீனா ஈஸ்டர்ன் விமானச் சேவை நிறுவனத்துடன் இணைந்தது.

சி919 ரக விமானம், சீனாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்பட்ட பெரிய ரக பயணியர் விமானமாகும். இந்த விமானம், சீனா ஈஸ்டர்ன் விமானச் சேவை நிறுவனத்தில் இணைந்துள்ள 6ஆவது விமானமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.