தைவான் தொடர்பான முன்மொழிவை அரசியல்மயமாக்குவதற்குத் தோல்வி உறுதி: சீனா
2024-05-28 10:01:38

உலக சுகாதார அமைப்பில் பார்வையாளராக தைவானைச் சேர்ப்பது குறித்து சில நாடுகள் முன்மொழிந்தன. மே 27ம் நாள் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77வது மாநாட்டில் இம்முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து, ஐ.நாவின் ஜெனிவா அலுவலகம் மற்றும் அங்குள்ள இதர சர்வதேச நிறுவனங்களுக்கான சீன நிரந்தரத் தூதர் ச்சேன் ஷூ ஊடகங்களுக்குக் கூறுகையில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக, உலக சுகாதார அமைப்பு, தைவான் தொடர்புடைய முன்மொழிவுகளை நிராகரித்து வந்துள்ளது. தைவான் சுதந்திரத்துக்கு வாய்ப்பு இல்லை. உலக சுகாதார அமைப்பில் தைவான் தொடர்பான முன்மொழிவுகளை அரசியல்மயமாக்குவது, வரவேற்பு கிடைக்காது. ஒரே சீனா என்ற கொள்கைக்கு அறைகூவல் விடும் எந்த ஒரு செயலும் தோல்வி அடையும் என்று தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கொள்கை தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது. வெளிநாட்டு உதவியுடன் தைவான் சுதந்திரம் நாடுவது, தன்வினை தன்னைச் சுடும். அரசியல் சதி வேலை, உலகின் பொது நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும். தைவான் பிரச்சினையைக் கொண்டு, சீனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சி தோல்வி அடைவது உறுதி என்றும் ச்சேன் ஷூ குறிப்பிட்டார்.