தரமிக்க கிராமப்புற சாலைகளின் கட்டுமானத்தை முன்னெடுத்து செல்லும் சீனா
2024-05-29 19:02:28

தரமிக்க கிராமப்புற சாலைகளின் கட்டுமானத்தை முன்னெடுப்பது என்ற கருப்பொருளிலான கூட்டம் 29ஆம் நாள் புதன்கிழமை சேஜியாங் மாநிலத்தின் ஷாவோசிங் நகரில் நடைபெற்றது. கிராமப்புற சாலைகளின் கட்டுமானப் பணிகள் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வழங்கிய உத்தரவில்,

தரமான சாலைகளின் மூலம், கிராமவாசிகள் வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் கிராம வளர்ச்சியை மேம்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கான புதிய சுற்று நடவடிக்கையை நன்றாக மேற்கொண்டு, அதன் தரமான வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து, கிராமங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது,  விவசாயிகள் அனைவரும் வசதியான வாழ்க்கை வாழ்வது, கிராமப்புற மற்றும் வேளாண்மையின் நவீனமயமாக்கலை துரிதப்படுத்துவது உள்ளிட்ட இலக்குகளை எட்ட விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.