பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான வரைவுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்
2024-05-29 19:11:38

படம்: CFP

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இணையும் விதம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தாக்கல் செய்துள்ள விருப்பக் கடிதத்தின் வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து, அரசின் செய்தித் தொடர்பாளர் சாய் வசாரன்கே மே 28ஆம் நாள் கூறுகையில், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இருப்பது, தாய்லாந்திற்கு நன்மை அளிப்பதுடன் சர்வதேச அரங்கில் தாய்லாந்தின் தகுநிலையை உயர்த்தவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.