மேக்ரான்: பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் தயார்
2024-05-29 19:15:11

நிலைமைக்கு ஏற்ப, பாலஸ்தீனத்தை ஒரு நடாக அங்கீகரிக்க பிரான்ஸ் தயாராகி வருகிறது என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார். மே 28ஆம் நாள் ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது இதை சுட்டிக்காட்டினார்.

அதே நாளில், நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.