2023ல் அமெரிக்காவின் மனித உரிமை மீறல் அறிக்கை
2024-05-29 11:37:21

சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் மே 29ம் நாள், 2023ம் ஆண்டு அமெரிக்காவின் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை வெளியிட்டது.

2023ம் ஆண்டில் அமெரிக்காவின் மனித உரிமை நிலைமை தொடர்ந்து மோசமாகி வந்துள்ளது. அமெரிக்காவில், மனித உரிமைகள் படிபடியாக இரு துருவங்களை நோக்கிச் செல்கின்றன. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஆதிக்கத்தால், உயர் தகுநிலையை வகித்த சிறுப்பான்மையினர்களை விட, பெரும்பாலான பொது மக்கள், மென்மேலும் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களது அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றன.

அமெரிக்க அரசு கட்டுப்படுத்தாமல் இருந்ததால், துப்பாக்கி வன்முறை பிரச்சினை ஒழிக்கப்பட முடியவில்லை. 2023ம் ஆண்டில் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 654 பெருமளவிலான துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சுமார் 43 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சராசரியாக தினமும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். கட்சிகளிடையே தீவிர போட்டி மற்றும் நலன்களை நாடும் குழுக்களின் ஊக்கத்துடன், மேலதிகமான மாநில அரசுகள், சட்டமியற்றல் போக்கை முன்னெடுத்து, துப்பாக்கியைக் கொண்டு செல்லும் குடிமக்களின் உரிமையை அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 27 மாநிலங்களில் உரிமம் இல்லாமல், துப்பாக்கியை எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.

அமெரிக்க அரசு, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, பொது மக்களின் தனியுரிமையைக் கண்காணித்து வருகிறது. மக்களின் பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம், கட்டுப்படுத்தப்படுகிறது. அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வுப் பணியகம், வெளிநாட்டு உளவு மற்றும் கண்காணிப்பு சட்டத்தின் 702வது விதியை, உள்நாட்டுக் கண்காணிப்புக்காகப் பயன்படுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் போட்டிகளின் நிதியுதவியாளர்கள் மற்றும் இனவெறிக்கு எதிரான மக்களின் தகவல் தொடர்பு, பெருமளவிலும் தொடர்ச்சியாகவும் ஒற்று கேட்கப்பட்டுள்ளது. மேலதிகமான மாநிலங்களில், சட்டமியற்றல் மூலம் வெளியாகிய தடை விதிகளின்படி, அரசு சார் பள்ளிகளில் இனம், வரலாறு, பாலினம் உள்ளிட்ட பல தலைப்புகள் தொடர்பான கல்வி தரவுகள் மற்றும் புத்தகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில், கருத்து தெரிவித்ததால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய பதிவாகியுள்ளது.

காவற்துறையினர்கள், வன்முறையைப் பயன்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், காவற்துறையின் சட்ட நடைமுறையாக்க அமைப்பின் உண்மை பயன் இழந்து விட்டது. 2023ம் ஆண்டில் அமெரிக்க காவற்துறையினர்கள் குறைந்தபட்சம் 1247 பேரைக் கொன்றுள்ளனர். சராசரியாக தினமும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவற்துறையின் உள்விவகார வாரியங்கள், சகப்பணியாளர்களுக்குக் குற்றப்பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் அக்கறை கொள்கின்றன. அத்துமீறல் செயல்களுக்கு புலனாய்வு இல்லாத நிலையில், காவற்துறையினர்களின் பொறுப்பைக் கோருவது கடினம். அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் உயிரிழப்பு தரவுகளின்படி, காவற்துறையினரின் கொலை சம்பவங்களில் 50 சதவீதத்திற்கும் மேல், சாதாரணக் கொலை அல்லது தற்கொலை என தவறாகப் பதிவு செய்யப்படுகின்றன.

பெருமளவிலான சிறைவாசம் மற்றும் கட்டாய உழைப்பு பிரச்சினையால், அமெரிக்கா சிறை நாடாகத் திகழ்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கு கீழ் மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவின் சிறைகளில், உலகின் 25 விழுக்காட்டுக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். உலகளவில் மிக உயர்ந்த சிறைவாச விகிதம் மற்றும் மிக அதிகமான கைதிகள் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கைதிகள், குறைந்த வருமானம் அல்லது இலவசமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் சில நூறு கோடி டாலர் மதிப்புள்ள உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவையை அவர்கள் வழங்குகின்றனர்.

அமெரிக்க கட்சிகளிடையில் போட்டிகள் தீவிரமாகுவதுடன், தேர்தலைக் கட்டுப்படுத்தும் சதிவேலைகளும் நடைபெற்று வருகின்றன. 118வது நாடாளுமன்றத்தில் பிரதிநிதி அவை தலைவருக்கான தேர்தல் இரு முறையாக தோல்வி அடைந்தது. மேலும், 2023ம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றல் பணித்திறன், அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின், மிக மோசமாக உள்ளது என்று கருதபட்டது. இரு கட்சிகள், பல்வேறு வழிமுறைகளில் தேர்தல் மண்டலங்களின் மீண்டும் வரையறுத்தலைக் கட்டுப்படுத்தி, சுய நலன்களுக்காக பொது மக்களின் கருத்துகளைப் புறக்கணித்துள்ளன. 16 மாநிலங்களின் தேர்தல் மண்டலங்களை வகுப்பது, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 12 மாநிலங்கள், கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், அமெரிக்க பொது மக்கள், கூட்டாட்சி அரசு மற்றும் பல்நிலை அரசுகளின் மீது, கடும் மனநிறைவின்மை தெரிவிக்கின்றனர். 76 விழுக்காட்டு அமெரிக்கர்கள், தங்கள் நாடு தவறான திசையில் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறுப்பான்மை இன மக்கள் அமைப்பு முறையான இனவெறி பாகுபாட்டை எதிர்நோக்கி வருகின்றனர். இனவாதத்தின் பாதிப்பு ஆழமாகவும் நீண்டகாலமாகவும் உள்ளது. ஆப்பிரிக்க வம்சாவழியை சேர்ந்தவர்கள் காவற்துறையினர்களால் கொலை செய்யப்படும் விகிதம் வெள்ளை இன மக்களை விட, 3 மடங்கு அதிகம். காவலில் வைக்கப்படும் விகிதம் 4.5மடங்கு அதிகமாகும். சுமார் நான்கில் மூன்று பகுதியான சீன வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் கடந்த ஓராண்டில் இனவெறி பாகுபாட்டுக்குள்ளாகியுள்ளனர். 55விழுக்காட்டு சீன வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் பகைமைக் குற்றம் அல்லது துன்புறுத்தலால் தங்கள் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அச்சப்பட்டுள்ளனர். பூர்வீக அமெரிக்க இந்தியர்கள் எப்போதும் பண்பாட்டு ஒடுக்குமுறையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மத நம்பிக்கை மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இனவாதம் வெளிநாடுகளிலும் வேண்டுமென்றே பரவியுள்ளது.

பொருளாதார மற்றும் சமூகத்தின் சமத்துவமின்மை நாளுக்கு நாள் தீவிரமாகியுள்ளது. கீழ்மட்ட மக்களின் வாழ்க்கை மோசமாகி வருகிறது. பொருளாதார மற்றும் சமூக பண்பாட்டு உரிமை பற்றிய சர்வதேச பொது ஒப்பந்தத்தை அமெரிக்கா இன்னும் நிறைவேற்ற சம்மதிக்கவில்லை. ஏழை மக்களைச் சுரண்டி பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அமைப்பு முறையின் பாதிப்பில், அமெரிக்காவின் ஏழை பணக்கார இடைவெளி 1929ஆம் ஆண்டின் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு பின்பு காணப்பட்ட மிக கடுமையான நிலை தற்போது நிலவியுள்ளது. சமூக கட்டமைப்புத் தன்மையால் வறுமையில் சிக்கியுள்ள ஏழையான பணியாளர்களுக்கு சமத்துவமான வாய்ப்பு இல்லை. தங்கள் நிலைமையை மேம்படுத்தும் சூழல் கடினமாகி உள்ளது.  வீடுவாசலின்றி அல்லல்படுபவர்களின் எண்ணிக்கை 6லட்சத்து 50ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 2007ஆம் ஆண்டு இப்புள்ளிவிவரம் எடுக்கப்பட்ட பின்பு காணப்பட்ட மிக அதிகமான பதிவை இது உருவாக்கியுள்ளது. மேலும், போதை பொருள் மற்றும் மருந்துகளின் தவறான பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்கொலை விகிதமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தவிரவும், மகளிருக்கான எந்த வடிவத்திலுமான பாகுபாட்டை நீக்குவதற்கான ஐ.நாவின் பொது ஒப்பந்தத்தையும் அமெரிக்கா இன்னும் நிறைவேற்றவில்லை. ஐ.நா உறுப்பு நாடுகளில் குழந்தைகளுக்கான உரிமை பொது ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரே ஒரு நாடு அமெரிக்காவாகும். பாலினம் பாகுபாடு தடை பற்றிய விதிகள் அமெரிக்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதுவரை இன்னும் இல்லை. குழந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை அளித்து வாக்குறுதியின் பேரில் விடுதலை செய்ய முடியாத ஒரே ஒரு நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவின் கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 20ஆண்டுகளில் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 22லட்சமத்துக்கும் அதிகமான கர்ப்பிணி வயதான பெண்கள் மகப்பேறு மருத்துவ சிகிச்சையைப் பெற முடியாது. குறைந்தபட்சம் 21 மாநிலங்களில் கருக்கலைப்புக் குறித்து, தடை அல்லது கடுமையான கட்டுப்பாடு உண்டு. ஆண்டுதோறும், சுமார் 54ஆயிரம் மகளிர் கர்ப்பிணிப் பாகுபாட்டால் வேலையை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான குழந்தைகளின் மருத்துவக் காப்பீட்டு மானியத்தின் தகுதி பறிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வளர்ப்புக் குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். சோதனை முடிவின்படி, 46 மாநிலங்களில் சுமார் 34ஆயிரத்து 800 வளர்ப்புக் குழந்தைகளின் காணாமல் போன வழக்குகள் மறைக்கப்பட்டுள்ளன.

எல்லைப் பிரதேசத்தில் மனிதநேய நெருக்கடி தீவிரமாகியுள்ளது. குடியேறுபவர்களின் சோகம் அதிர்ச்சியளித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பிரதேசம் உலகில் தரைவழி குடியேற்ற வழிகளில் மிக அபாயகரமானது என்று சர்வதேச குடியேறுபவர்களின் அமைப்பு பட்டியலிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் வரையான 12 மாதங்களில், எல் பாஸோ எல்லைப் பகுதியில் மட்டும், 149 குடியேறுபவர்கள் உயிரிழந்தனர். 2023ஆம் நிதியாண்டில், அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்ட அல்லது வெளியேற்றப்பட்ட குடியேறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 24லட்சத்தை எட்டி வரலாற்றில் முன்பு கண்டிராத புதிய பதிவை உருவாக்கியது. மேலும், அமெரிக்காவில் நுழைந்த குடியேறுபவர்கள் சித்திரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற தண்டனையைப் பெற்றுள்ளனர். எல்லைக் கொள்கை ஆள் கடத்தல் பிரச்சினையைத் தீவிரமாக்கி நவீன அடிமை அமைப்பு முறையை ஏற்படுத்தியது. மேலும் குடியேற்ற குழந்தைகள் கொடூரமான கட்டாய உழைப்பு மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலாதிக்கவாதம், ஒருதரப்புவாதம், அதிகார அரசியல் ஆகியவற்றை அமெரிக்கா நீண்டகாலமாகப் பின்பற்றி மனிதநேய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 911சம்பவத்துக்குப் பிறகு, வெளிநாடுகளில் அமெரிக்காவின் “பயங்கரவாத தடுப்புக்கான” போர் இடங்களில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் 45லட்சம் முதல் 47லட்சம் வரையாகும். பத்துக்கும் அதிகமான நாடுகளில் “வெளிநாட்டு முகவர் திட்டத்தை” அமெரிக்கா மேற்கொண்டு பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் மனித உரிமையை மீறியுள்ளது. மோதலுக்குள்ளான பகுதிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கிப் பெருமளவான அப்பாவி மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமையைக் கடுமையாக மீறிய குவாண்டனாமோ சிறை தற்போது வரை இன்னும் இயங்கி வருகிறது. ஒரு சார்புத் தடை நடவடிக்கையை நீண்டகாலமாக மேற்கொண்டுள்ளது. தடை நடவடிக்கை மேற்கொண்ட மொத்த எண்ணிக்கை உலகளவில் முதலிடத்தை வகித்து கடுமையான மனிதநேய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு பல மனித உரிமைப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றால், மனித உரிமை அமெரிக்காவில் சிறுபான்மையின மக்களின் சிறப்பு உரிமையாக மாறியுள்ளது. அதோடு, உலகின் மனித உரிமை லட்சியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தல் மற்றும் தடுப்பை வழங்கியுள்ளது.