பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவு பற்றிய சீன மற்றும் எகிப்து கூட்டறிக்கை
2024-05-30 09:18:03

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபாத்தா அல்-சிசி மே 28ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

இரு தரப்புகளின் உறவு, பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றுவது, பலதரப்புகளின் கட்டுக்கோப்புக்குள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். பொது அக்கறை கொண்ட பல சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறியதுடன், கூட்டறிக்கையையும் வெளியிட்டனர்.