சீனாவில் முதல்முறையாக அனைத்துலக அறிவுசார் சொத்துரிமை மாநாடு
2024-05-30 20:04:29

அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்தின்(AIPPI)2024ஆம் ஆண்டின் மாநாடு வரும் அக்டோபர் 19 முதல் 22ஆம் நாள் வரை செஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோ நகரில் நடைபெறும் என்று வியாழக்கிழமை தகவல் வெளியானது.

அறிவுசார் சொத்து பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் நிறுவப்பட்ட 127 ஆண்டுகளில் அனைத்துலக அறிவுசார் சொத்துரிமை மாநாடு சீனாவில் நடைபெறுவது இது முதல்முறை. இதில், 80க்கும் அதிக நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1500 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.