ஜெர்மன் அமைச்சர்கள்: சீன மின்சார வாகனம் மீது சுங்க வரியை உயர்த்துவது 'தவறானது'
2024-05-30 19:05:34

சீனாவின் மின்சார வாகனங்கள் மீது கூடுதலான சுங்க வரி விதிப்பது, ஐரோப்பாவின் சம்பந்தப்பட்ட தொழில்களின் வளர்ச்சியை பாதுகாக்காது. மாறாக, ஜெர்மனின் நிறுவனங்கள், ஜெர்மன் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறையில் நியாயமான போட்டிச் சூழல் ஆகியவற்றுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜெர்மன் போக்குவரத்து, பொருளாதாரம் மற்றும் நிதித் துறை அமைச்சர்கள் அண்மையில் தெரிவித்தனர்.

அவர்களில் ஜெர்மன் துணைத் தலைமை அமைச்சரும் பொருளாதார துறை அமைச்சருமான ஹேபெக் ரைனிஷ் போஸ்ட் செய்தித்தாளுக்குப் பேட்டியளிக்கையில்

ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் மின்சார வாகனங்கள் மீது சுங்க வரியை உயர்த்துவது, ஜெர்மன் பொருளாதராத்திற்குத் தீங்கு விளைவிக்கும். நியாயம், திறந்த நிலை மற்றும் சமத்துவம் வாய்ந்த உலகளாவிய வர்த்தக கொள்கையை பல்வேறு நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். சீனா, உலகின் தொழிற்சாலை மற்றும் பெரிய சந்தையாக உள்ளது. தவிரவும், சீனா எப்போதும் ஐரோப்பாவுக்கு முக்கிய வர்த்தக பங்காளியாகவும் திகழ்றது. தொலைநோக்குப் பார்வையில் கொள்கைகளை வகுப்பது பற்றி சிந்திக்க வேண்டுகிறோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.