சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பின் சாதனைகள்
2024-05-30 18:57:51

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் பல முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. பெய்ஜிங் அறிக்கை, சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 2024-2026ம் ஆண்டுக்காலச் செயல்பாட்டுத் திட்டம், பாலஸ்தீன பிரச்சினை குறித்து சீன-அரபு நாடுகள் கூட்டறிக்கை ஆகிய மூன்று சாதனை ஆவணங்கள் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தவிரவும், சீன தரப்பு, கூட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு நாடுகள் மற்றும் அரபு நாடுகள் லீக் செயலகத்துடன், இரு தரப்பு மற்றும் பல தரப்புகளின் ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளது.