சீனச் சர்வதேசக் காய்கறி தொழில் நுட்பப் பொருட்காட்சி
2024-05-30 15:17:41

25வது சீனச் சர்வதேசக் காய்கறி தொழில் நுட்பப் பொருட்காட்சி தற்போது ஷான்தொங் மாநிலத்தின் ஷோவ்குவாங் நகரில் நடைபெறுகின்றது. 4 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்புரப்பு கொண்ட முக்கிய காட்சியிடத்தில், 10 காட்சியரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 600 புதிய வகைகள் உள்ளிட்ட 2600க்கும் மேலான வகைகளிலான காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 100க்கும் மேலான முன்னேறிய தொழில் நுட்பங்களும் இப்பொருட்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.