மாலத்தீவின் புதிய நாடாளுமன்றத்தின் தலைவருக்கான சீனாவின் வாழ்த்து
2024-05-31 14:21:41

சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ்லேஜி, மே 29ஆம் நாள், தொலைபேசி மூலம், மாலத்தீவின் புதிய நாடாளுமன்றத் தலைவர் அமுதல் ரஹீமுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  

அவர் கூறுகையில்,

சீனாவும் மாலத்தீவும் நட்பு அண்டை நாடுகளாகும். இரு தரப்புகளுக்கிடையில் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 52 ஆண்டுகளில், இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, ஒன்றுடன் ஒன்று சமத்துவமாக பழகி வருவதுடன், முக்கிய கவனம் மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து வருகின்றன. மாலத்தீவுடன் சேர்ந்து, இரு நாட்டு தலைவர்களின் ஒருமித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் மாலதீவின் நாடாளுமன்றத்துடன் நட்பார்ந்த தொடர்பையும் ஒத்துழைப்பையும் விரைவுபடுத்த வேண்டும். இரு நாடுகளுக்கிடையில் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஆழமாக்கி, சீன-மாலத்தீவின் பொது சமூகத்தைக் கட்டியமைக்க சீனா பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.