சீன மற்றும் அரபு நாடுகளுக்கான பொது சமூக எதிர்காலக் கட்டுமானம்
2024-05-31 10:35:59

சீனா 2026ஆம் ஆண்டில் 2ஆவது சீன-அரபு நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது. சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 30ஆம் நாள் நிகழ்த்திய உரையில் இத்தகவலை அறிவித்தார். இது இக்கூட்டத்தின் மிக முக்கிய முன்னேற்றமாகும்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் அரபு நாடுகளும் உலக அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கும் மாதிரியாகவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியை உயர் தரமாக கட்டியமைக்கும் முன்மாதிரியாகவும் திகழ வேண்டும். வெவ்வேறு நாகரிகங்களுடன் இணக்கமான கூட்டுவாழ்வினை மேற்கொள்ளும் முன்மாதிரியாகவும், உலகளாவிய நிர்வாகத்தின் சரியான பாதையை ஆராய்வதற்கான எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும். மேற்கூறிய நான்கு இலக்குகள் சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன என்றார்.

இக்கூட்டத்தில் பாலஸ்தீனப் பிரச்சினை பற்றிய சீனா மற்றும் அரபு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காசா மோதல் விரைவில் நிறுத்தப்பட்டு, பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமான முறையில் தீர்ப்பதற்குரிய வழிமுறையை முன்னேற்ற வேண்டும்.

இக்கூட்டத்தைப் புதிய துவக்கப் புள்ளியாகக் கொண்டு, மாறி வரும் உலகத்துக்கு மேலதிக நிதானத்தையும் உறுதிதன்மையையும் ஊட்டும் வகையில், சீனாவும் அரபு நாடுகளும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, இரு தரப்பு ஒத்துழைப்பின் அடுத்த 20 ஆண்டுகளின் பரகாசமான எதிர்காலத்தை உறுதியாக உருவாக்கும்.