பாலஸ்தீன பிரச்சினைக்கான சீன-அரபு நாடுகளின் கூட்டறிக்கை
2024-05-31 11:26:58

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்றது. பாலஸ்தீன பிரச்சினை குறித்து இரு தரப்புகளும் ஆழமாக விவாதித்தன.

இரு தரப்புகளுக்கிடையில் ஒருமித்த கருத்துக்கள் எட்டப்பட்டன. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இரு தரப்புகளும் கண்டித்துள்ளன. கட்டுப்பாட்டு தன்மை வாய்ந்த தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பவை வெளியிட வேண்டும் என்று இரு தரப்புகளும் வலியுறுத்தியுள்ளன. உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். பாலஸ்தீன மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்வதை நிறுத்த வேண்டும். கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்ட பாலஸ்தீன உரிமை பிரதேசம், சிரியாவின் கோலன் குன்று, லெபனான்னின் சில உரிமை பிரதேசங்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதை நிறுத்தாமல் இருந்தால், பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிதானத்தை நனவாக்க முடியாது என்று இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.