சாட் தலைமையமைச்சருக்கு லீ ச்சியாங் வாழ்த்து செய்தி
2024-05-31 14:20:34

சாட் தலைமையமைச்சராக பதவியேற்றுள்ள அல்லாஹ்-மயே ஹலினாவுக்குச் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 29ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

லீ ச்சியாங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் சாட் அரசுத் தலைவர் முஹம்மதின் தலைமையில், இரு நாட்டு உறவு சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது. ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கை இடைவிடாமல் ஆழமாகி வருகின்றது. பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு நிதானமாக முன்னேறி வருகின்றது. இரு நாட்டு உறவின் வளர்ச்சிக்குச் சீன அரசு முக்கியத்துவம் அளிக்கின்றது. சாட் தலைமையமைச்சர் ஹலினாவுடன் இணைந்து பாடுபட்டு, அரசியல் துறையில் இரு நாடுகளின் நம்பிக்கையை ஆழமாக்கி, பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்றி, இரு நாடுகளின் நட்பார்ந்த உறவு புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற விரும்புவதாக என்றார்.