சீனா மற்றும் உலகம்: ஒத்துழைப்பு அறைக்கூவல் கூட்டு வெற்றி எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கில் துவக்கம்
2024-05-31 09:22:00

 

சர்வதேச பரப்புரை ஆற்றலின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் வெளியிட்ட முக்கிய உரையின் 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனா மற்றும் உலகம்: ஒத்துழைப்பு அறைக்கூவல் கூட்டு வெற்றி என்னும் சிறப்புக் கருத்தரங்கு மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கைச் சீன ஊடகக் குழுமமும் சீன மக்கள் பல்கலைக்கழகமும் கூட்டாக இணைந்து நடத்தின.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹைய்சியொங் இதில் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், சீனாவின் சர்வதேச பரப்புரை ஆற்றலின் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை சரியான திசையைக் காட்டியுள்ளது. நிறுவப்பட்ட கடந்த 6ஆண்டுகளில், சீன ஊடகக் குழுமத்தின் சர்வதேச பரப்புரை ஆற்றல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலக மேடையில் சீனாவை மேலும் செவ்வனே முன்னெடுத்துச் செல்வதற்கு, நாம் நாகரிகங்களுக்கிடையே பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். சீனாவும் உலகமும் மேலும் அருமையான எதிர்காலத்தை நோக்கி வளர்வதை முன்னேற்றுவதற்கு, நாம் உலக வளர்ச்சிக்கான பொதுக் கருத்துகளை ஒன்றிணைக்க வேண்டும். அயல் நாட்டு நண்பர்களுடன் கைகோர்த்து கொண்டு, ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக்கொண்டு பரிமாற்றம் நடத்தி மேலும் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்று ஷென் ஹைய்சியொங் தெரிவித்தார்.