சீன-அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2024-06-01 16:56:38

சிங்கப்பூரில் நடைபெறுகின்ற 21வது ஷாங்க்ரிலா உரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்த சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங்ஜுன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் மே 31ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டோங்ஜுன் கூறுகையில், இரு நாட்டுப் படை உறவின் சீரான வளர்ச்சியைச் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. அமெரிக்கா, சீனாவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்தக் கருத்துகளைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், அமெரிக்கா வாக்குறுதியைக் கடுமையாக மீறி, தைவான் சுதந்திர சக்திகளுக்கு தவறான சமிக்கை தருவதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. அமெரிக்கா, எல்லா வடிவிலும் தைவான் சுதந்திர சக்திகளுக்கு ஆயுத ஆதரவை அளிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.