லிபியத் தலைமையமைச்சர் சீன ஊடகக் குழுமத்துக்கான சிறப்புப் பேட்டி
2024-06-01 17:03:13

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இக்கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்த லிபியத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான அப்துல் ஹமீத் திபீபா, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், அரபு நாடுகள், குறிப்பாக லிபியாவைப் பொறுத்தவரை, சீனா மிகவும் முக்கியமானது. சீனாவுக்கு மதிப்பு அளிப்பதோடு, லிபிய மக்களுக்கு சீனா வழங்கிய பெரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். சீன அரசுத் தலைவர் முன்வைத்த பல முன்மொழிவுகளை ஆதரிக்கின்றோம். பொருளாதார வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனா பங்காற்ற எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும், பாலஸ்தீனத்தின் நீதியான லட்சியத்துக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் சீனா அளித்த ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், போர் நிறுத்தத்துக்கும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். சீனாவும் லிபியாவும் முதலீட்டுக் கூட்டாளிகளாக விளங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.