குவெய்த் புதிய தலைமையமைச்சருக்கு லீ ச்சியாங் வாழ்த்து
2024-06-01 19:25:47

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 29ஆம் நாள் குவெய்த் தலைமையமைச்சராக பதவி ஏற்ற சபாஹ்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

லீ ச்சியாங் கூறுகையில் சீனாவும் குவெய்த்வும் ஆழ்ந்த பாரம்பரிய நட்புறவை நிலைநிறுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் ஏமிர் மிஷால்வின் வழிகாட்டலுடன், இரு நாட்டுறவு சீரான வளர்ச்சி போக்கினை நிலைநிறுத்தி வருகிறது. குவெய்த் அரசுடன் இணைந்து இரு நாட்டு தலைவர்கள் எட்டிய முக்கிய பொது கருத்துக்களைச் செயல்படுத்தி, பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவு புதிய முன்னேற்றமடைவதை விரைவுபடுத்த சீன அரசு விரும்புவதாக தெரிவித்தார்.