அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் கூற்றுக்கு சீனா பதில்
2024-06-01 19:35:28

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஷங்க்ரிலா உரையாடல் கூட்டத்தில், “இந்தோ-பசிபிக் நெடுநோக்கு”, தைவான் தொடர்பான பிரச்சினை ஆகியவை குறித்து அதிகமாக பேசினார். இதற்கு சீனத் தரப்பு பதில் அளித்தது.

சீனத் தரப்பு கூறுகையில், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் நெடுநோக்கு, பிரதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவதன் பெயரில் முன்வைக்கப்பட்டது. உண்மையில் பனிப் போர் சிந்தனையுடன், அமெரிக்காவின் தலைமையிலான மேலாதிக்க தகுநிலையைப் பேணிகாப்பதற்கான செயலாகும்.

மேலும், இந்த நெடுநோக்கு, சாராம்ச ரீதியில் பிளவை உருவாக்கி, பகைமையை எழுப்பி, நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் நெடுநோக்கு ஆகும். இது வரலாற்று ஓட்டத்துக்கு எதிராக, அமெரிக்காவின் புவி அரசியல் நலனுக்கு சேவை புரிக்கிறது என்று தெரிவிக்கிறது.

தைவான் பிரச்சினை, சீன-அமெரிக்க உறவில் மிக முக்கிய மற்றும் உணர்வலை தன்மையுடைய மையப் பிரச்சினையாகும். கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கத் தரப்பு வாக்குறுதியைக் கைவிட்டு, தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கிறது. தைவான் சீனாவிலிருந்து பிளவுப்படுவதை சீன மக்கள் விடுதலை படை அனுமதிக்காது. நாட்டின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கும் கடைமையை உறுதியுடன் நிறைவேற்றும் என்று சீனத் தரப்பு தெரிவித்தது.