சீனப் பயணம் மீது பாகிஸ்தான் தலைமையமைச்சர் எதிர்பார்ப்பு
2024-06-01 17:40:43

சீனாவின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் ஷெரிஃப் ஜுன் 4 முதல் 8ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் மே 30ஆம் நாள் சீன ஊடக குழுமத்தின் செய்தியாளருக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.

பேட்டியில் அவர் கூறுகையில், சீனாவும் பாகிஸ்தானும் சகோதரர்கள் போல இருக்கின்றன. இப்பயணத்தில் சீன தரப்பினருடன் இணைந்து ஆழமாக விவாதம் செய்து, இரு தரப்பு தொழில் நிறுவனங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டத்தை புதிய மட்டத்திற்கு உயர்த்த விரும்புவதாக தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு மற்றும் உலக நாகரிக முன்மொழிவைச் செயல்படுத்த பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது என்றும், இந்த முன்மொழிவுகள் உலகிற்கு அமைதி, நிதானம், முன்னேற்றம் மற்றும் செழுமையைக் கொண்டு வரும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.