இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதம்
2024-06-01 16:51:22

2023 ஆண்டின் ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாகவும், 2024 ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது  காலாண்டில் 7.8 சதவீதமாகவும் வளர்ந்துள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விட சிறப்பாக உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி 2023-2024 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது.