இந்தியாவும் சீனாவும் சுமூகமான நட்புறவை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்:திரௌபதி முர்மு
2024-06-01 17:17:30

இந்தியாவும் சீனாவும் சுமூகமான நட்புறவை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையார் மே 31ஆம் நாள் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதர் ஷு ஃபெய்ஹோங் அன்று அவருக்கு அதிகாரப் பத்திரம் சமர்ப்பித்தார். அப்போது முர்மு கூறுகையில், சீரான இந்திய-சீன உறவு, இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் உலகத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

ஷு ஃபெய்ஹோங் கூறுகையில், இந்தியாவுடன் இணைந்து, சமாதான சக வாழ்வுக்கான 5 கோட்பாடுகளின் எழுச்சியைப் பரவல் செய்து, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கட்டுப்படுத்தி, பரஸ்பர பயனுள்ள ஒத்துழைப்புகளுக்கு ஊக்கமளித்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.