இலங்கை அரசுத் துறைகளில் நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த திட்டம்
2024-06-02 16:49:24

சமூக மற்றும் பொருளாதாரத்தில் அரசின்  முயற்சிகளை பெருமளவில் விரைவுபடுத்த நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இந்த முயற்சியில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் விக்ரமசிங்க வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய, செயற்கை நுண்ணறிவு போன்ற வளரும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை விரைவுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல்மயமாக்கல் மூலம் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தையும் எளிதாக்கும் என்று தெரிவித்துள்ளார்.