அமெரிக்காவின் “கடற்பயணச் சுதந்திரம்” பற்றிய சத்தியம்
2024-06-02 19:29:54

அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட 2023ஆம் நிதி ஆண்டு கடற்பயணத்தின் சுதந்திரம் பற்றிய அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு, சீனா உள்ளிட்ட 17 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் “அளவுக்கு அதிகமான 29 கடல் சார் உரிமை கோரிக்கைகளுக்கு” அறைகூவல் விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, “கடற்பயணச் சுதந்திரம்” என்ற சாக்குபோக்கில், அமெரிக்கா தனது ஆயுத ஆற்றலைக் காட்டிக்கொண்டு, கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு நாடுகளின் நேர்மையான கடல் உரிமை நலன்களையும், உலக கடல் ஒழுங்கையும் பேணிக்காப்பது, கடல் சட்டம் பற்றிய ஐ.நாவின் உடன்படிக்கையிலுள்ள கடற்பயணச் சுதந்திரத்தின் நோக்கமாகும். ஆனால், அமெரிக்காவின் இராணுவ மற்றும் தூதாண்மை நலன்களை உத்தரவாதம் செய்து, தனது கடல் சார் ஆதிக்கத்தைப் பேணிக்காப்பது தான், அமெரிக்கா கூறிய கடற்பயணச் சுதந்திரத்தின் நோக்கமாகும். இந்த இரு கருத்தாக்கங்கள், சாராம்சம் ரீதியில் வேறுப்பட்டன. கடல் சட்டம் பற்றிய ஐ.நாவின் உடன்படிக்கையில், அமெரிக்கா சேரவில்லை. ஆனால் கடற்பயணச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, வேறு நாடுகளின் கடல் சார் உரிமை கோரிக்கைகளுக்கு அறைகூவல் விட்டது.

தரவுகளின்படி, 2015 முதல் 2022ஆம் ஆண்டு வரை, தென் சீனக் கடல் கற்பாறை மீது, அமெரிக்கா 39 முறையாக “கடற்பயணச் சுதந்திரச் செயல்களை”மேற்கொண்டது. 2017ஆம் ஆண்டு டிரம்ப் அரசு பதவி ஏற்ற பின், அமெரிக்கா, தனது மேலை கூட்டாளிகளுடன் தென் சீனக் கடலுக்கு அருகிலான பிரதேசத்தில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது.

தென் சீனக் கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலையை அமெரிக்கா வேண்டுமென்றே உருவாக்கியுள்ளது. நிபுணர்களின் கூற்றைப் போல, அமெரிக்காவின் “கடற்பயணச் சுதந்திரச் செயல்”, அமெரிக்காவின் உலகளாவிய நெடுநோக்குகளை முன்னேற்றி, தனது பாதுகாப்பு நலன்களைப் பேணிக்காக்கும் இராணுவக் கருவியாகும்.