தென் சீனக் கடல் பிரச்சினை பற்றிய பிலிப்பைன்ஸின் உரைக்குச் சீனா பதில்
2024-06-03 14:46:26

ஷாங்க்ரி-லா உரையாடலில் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் பெர்டினாண்ட் ரோமுல்டெஸ் மார்கோஸ் நிகழ்த்திய தென் சீனக் கடல் பிரச்சினையுடன் தொடர்பான உரை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிலிப்பைன்ஸ் தரப்பின் தொடர்புடைய அறிக்கை வரலாறு மற்றும் உண்மைகளைப் பொருட்படுத்தாமல், கடல் தொடர்பான தவறான நிலைப்பாட்டை வெளிக்காட்டி, கடல் நிலைமையைத் திரித்துப்புரட்டியுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில், சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் விளக்கினார்.

முதலாவது, தென் சீனக் கடல் தீவுகள் மீது சீனாவுக்கு விவாதத்துக்குத் தேவையற்ற இறையாண்மையைக் கொண்டுள்ளது. தொடர்புடைய கடல் பகுதிகள் மீது இறையாண்மை உரிமை மற்றும் அதிகார வரம்பு சீனாவுக்கு உள்ளது.

இரண்டாவது, பிலிப்பைன்ஸின் உரிமை பிரதேசத்தில் தென் சீனக் கடல் தீவுகள் இல்லை.

மூன்றாவது, தென் சீனக் கடல் தொடர்பான வழக்கில் கூறப்படும் தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் பயனற்றது.

நானாவது, அண்மையில், சீனா-பிலிப்பைன்ஸ் தென் சீனக் கடல் பிரச்சினை தீவிரமாக்கிய காரணம், முற்றிலும் பிலிப்பைன்ஸ் ஆகும்.

ஐந்தாவது, தற்போது சீன மற்றும் ஆசியான் நாடுகளின் கூட்டு முயற்சியுடன், தென் சீனக் கடல் பற்றிய நிலைமை நிதானமாக இருக்கின்றது.

ஐந்தாவது, இறையாண்மை சுதந்திரம், உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் கடல் உரிமையைச் சீனா தொடர்ந்து உறுதியாகப் பேணிகாக்கும்.