எல் சல்வடோர் அரசுத் தலைவர் புக்கலே புதிய பதவியேற்பு விழாவில் சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு
2024-06-03 10:16:38

எல் சல்வடோர் அரசுத் தலைவர் நயீப் அர்மாண்டோ புக்கலே ஒர்டெஸின் பதவியேற்பு விழாவில் சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதரும் பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சருமான சன் யெலி அந்நாட்டுத் தலைநகர் சான் சால்வடோரில் ஜூன் முதல் நாள் கலந்து கொண்டார்.

இப்போது ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக்களை புக்கலேவிடம் அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 6 ஆண்டுகளில் இரு நாட்டு அரசுத் தலைர்களின் கூட்டுத் தலைமையில், இரு நாட்டு உறவு பன்முகங்களிலும் வேகமாக வளர்ந்து வருகின்றது. எல் சல்வடோருடன் இணைந்து பாடுபட்டு, பயனுள்ள ஒத்துழைப்பு நிலைமையை உயர்த்தி, மானிடவியல் பரிமாற்றத்தை விரிவாக்கி, இரு நாட்டு உறவு தொடர்ச்சியான மற்றும் ஆழமான வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

புக்கலே கூறுகையில், சீனாவுடனான உறவுகளை வளர்ப்பது எல் சல்வடோருக்கு முக்கியமானது. சீனாவுடன் இணைந்து ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதை ஆழமாக்கி, இரு நாட்டு உறவை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்வதை ஊக்குவிக்க எல் சல்வடோர் விரும்புகின்றது என்றார்.